எல்லாவற்றுக்கும் மிக விரைவில் பதில் கிடைக்கும்! – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ‘சனல் 4’ வீடியோ பற்றிய கேள்விக்கு ரணில் இப்படிக் கருத்து.

“எல்லாவற்றுக்கும் மிக விரைவில் பதில் கிடைக்கும். இதன் அர்த்தம் என்னவென்று என்னிடம் திரும்ப வினா தொடுக்க வேண்டாம்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் நல்லாட்சி அரசின் காலத்தில் – 2019ஆம் ஆண்டு 300 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையான் என அழைக்கப்படும் தற்போதைய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும், ராஜபக்சக்களும் இருந்தனர் என்று ‘சனல் 4’ வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நல்லாட்சி அரசின் காலத்தில் பிரதமராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதில் வழங்கினார்.