“மாரிமுத்துவின் இறப்பு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பு” – சசிகலா இரங்கல்

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். இவரின் இந்த இறப்பு செய்தி சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இவரின் உடலுக்கு திரைத்துறையினர், சின்னத்திரையினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் நேரில் வந்தும் சமூக வலைத்தளங்களிலும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணத்திற்கு தனது X ( ட்விட்டர் ) பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள சசிகலா, “திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மாரிமுத்து அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
சகோதரர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.