கேரளா இளைஞனால் ஏமாற்றப்பட்ட டென்மார்க் இலங்கைப் பெண் (வீடியோ)

இலங்கை பிறப்பிடமாக கொண்ட தர்சினி செல்வராஜா தற்போது டென்மார்க்கில் உளநல மருத்துவராக உள்ளார். ஒரு இசை ஆப் வழியாக கேரளா கொச்சினிலுள்ள தஸ்லீம் முபாரக் முகமத் சாலி என்ற இளைஞனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தஸ்லினை டென்மார்க் வருவித்து அவனுடன் ஒருமாதம் வாழ்ந்துள்ளார். தர்சினியிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பொருளாகவும் பணமாகவும் பெற்று கொண்டு , ஒரு குழந்தையும் கொடுத்து விட்டு கேரளாவில் வந்து தலைமறைவாகி விட்டான் தஸ்லீம் முகமத்.
தர்சினி இலைங்கையை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர் என அறிந்தும் நல்லுறைவை பேணி வந்த தஸ்லீம் பெற்றோர், பணத்தை அபகரித்த பின்பு உள்ளூரிலுள்ள ஒரு இஸ்லாம் பெண்ணை பார்த்து கடந்த மாதம் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.
கடந்த வாரம், காதலன் மற்றும் அவன் குடும்பத்தால் ஏமாற்றப்பட்டு ரம்ஸி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டதை செய்திகள் வழியாக அறிந்த தர்சினி தற்போது மலையாள ஊடகங்களை அணுகி தனக்கும் நீதி வாங்கித்தர கெஞ்சி உள்ளார்.
தனது பெற்றோரை பிரிந்த நிலையில் தாய் மாமாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வரும் தர்சியை பற்றி பல அவதூறுகளை பரப்பி தர்சினி ஏற்கனவே திருமணம் ஆனவர் எனக்கூறி சட்டத்தின் முன்பிருந்து தப்பித்துள்ளான் தஸ்லீம் முபாரக்.
பணத்தையும் வாழ்க்கையும் இழந்த தர்சினி அழுது தனக்கு நீதி கிடைக்க ஒற்றை ஆளாக போராடி வருகிறார்.