ஈஸ்டர் தாக்குதல், தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விவாதம் நடத்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளது.