காலிறுதிக்குள் பாசையூர் சென் அன்ரனீஸ், யங்கென்றிஸ் அணிகள் காலிறுதிக்கு தகுதி.
இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் அணிக்கு 9 பேர் உள்ளடக்கிய “வாலிப கிண்ணம்” மாபெரும் உதைபந்தாட்ட போட்டி இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் பாசையூர் சென் அன்ரனீஸ் அணியை எதிர்த்து மல்லாகம் சிறிமுருகன் அணி மோதியது. ஆரம்பத்தில் இருந்து போட்டியை தனது கட்டுபாட்டில் வைத்திருந்த சென் அன்ரனீஸ் அணியினர் அவ் அணியின் ஜோன் ராஜ் , கலிஸ்ரர் கோலாட்டம் ஆட ஆட்ட நேர முடிவில் 07:00 என்ற கோலடிப்படையில் பாசையூர் சென் அன்ரனீஸ் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது..
சென் அன்ரனீஸ் அணிசார்பாக ஜோன்ராஜ் 03 கோல்களையும், கலிஸ்ரர் 02 கோல்களையும் ,சறோன் ,டிவிஷன் தலா 01 கோல்களை பெற்று கொடுத்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக பாசையூர் சென் அன்ரனீஸ் வீரர் ஜோன் ராஜ் தெரிவானார்.
அடுத்த போட்டியாக
துறையூர் ஐயனார் அணியை எதிர்த்து இளவாலை யங்கென்றிசியன் அணி மோதியது. ஆரம்பத்தில் இருந்து மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் எதிரணி கோல்கம்பங்களை மாறி மாறி ஆக்கிரமிக்க இரு அணிகளும் கோல் போடும் வாய்புக்களை தவறவிட முதல் பாதியாட்டம் இரு அணிகளும் கோல் போடாத நிலையில் 00:00 என முடிவுற்றது.
இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பத்திலிருந்து ஆட்டம் சூடுபிடித்தது. சொந்த மைதானத்தில் விளையாடிய யங்கென்றிஸ் அணிக்கு மிகக் கடினமான போட்டியை வழங்கி மிகச் சிறப்பாக விளையாடிய ஐயனார் அணி கோல் போடுவதற்காக போராடிய போதும் யங்கென்றிஸை அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் போடுவதற்காக கடும் முயற்சி மேற்கோண்டும் பலன் அளிக்காமல் போக பதிலுக்கு யங்கென்றிஸ் அணியும் கோல் போடும் சந்தர்ப்பங்களை வீணடிக்க இரு அணிகளும் கோல் போடாத நிலையில் 00:00 என ஆட்டம் நிறைவு பெற்றது.
வெற்றியை தீர்மானிப்பதற்கான சமனிலை தவிர்ப்பு உதையில் 05:04 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்தது யங்கென்றிசியன் அணி.
போட்டியின் ஆட்ட நாயகனாக யங்கென்றீசியன் அணியின் வீரர் டிலைக்சன் தெரிவு செய்யப்பட்டார்.