லோகேஷ் கனகராஜுடன் இணைந்த ரஜினி.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.
ரஜினி 171 போஸ்டர் இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.