சைபர் தாக்குதல் குறித்த விரிவான விசாரணை தொடங்குகிறது.

அண்மையில் அரசாங்க மின்னஞ்சல் முகவரிகள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கூட்டுத்தாபனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற இணையத் தாக்குதல் காரணமாக பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் பரிமாற்ற தரவுகள் காணாமல் போயுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
gov.lk டொமைன் டேட்டா சிஸ்டம் புதுப்பிக்கப்படாமையால் தாக்குதலைத் தடுக்க முடியாது என பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை, இணையத்தள தாக்குதலை நடத்திய குழு தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.