சனாதன விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
சனாதன விவகாரத்தில் உதயநிதி, பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத உணா்வுகளை புண்படுத்தியதாக, தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் மகனும் கா்நாடக அமைச்சருமான பிரியங்க் காா்கே ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலதுசாரி வழக்குரைஞர்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்
ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எவ்வித வழக்காக இருந்தாலும் முறையீட்டுக்கான வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், உரிய வழிமுறைப்படி வழக்கு குறித்து திங்கள்கிழமை முறையிடவும், மனுதாரருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.