யாழில் பெற்றோல் குண்டு வீசி காதலன் வெறியாட்டம்! – காதலி உள்ளிட்ட ஐவர் காயம்.

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டுக்குள் தனது சகாக்களுடன் புகுந்த காதலன், வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காதலி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ். தாவடி, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் மீது இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் தலைமையிலான கும்பல், வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியுள்ளது. அத்துடன் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் என்பவற்றையும் அடித்து உடைத்த கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவத்தில் வீட்டில் இருந்த யுவதி ஒருவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உரும்பிராய் பகுதியில் உள்ள இளைஞன் ஒருவரின் தலைமையில் வந்த கும்பலே தாக்குதல் மேற்கொண்டது எனவும், காதல் விவகாரமே தாக்குதலுக்குக் காரணம் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட இளைஞரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவரையும், அவருடன் தாக்குதலுக்கு வந்த ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.