மீண்டும் பல்லாவரம் சந்தை திறப்பு..
வெள்ளிக் கிழமை சந்தை சென்னை நகரில் மிகவும் புகழ் பெற்றது. கொரோனோவால் இச்சந்தை மார்ச் 24 ந் தேதி மூடப்பட்டது.
ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் சந்தை மீண்டும் செயல்பட ஆரம்பித்தது. சமூக இடைவெளி மற்றும் கொரோனோ தடுப்பு அம்சங்களுடன் செயல்படுகிறது. மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினியை அவ்வப்பொழுது தெளித்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் முகமூடி அணிந்து வருகின்றனர்.
இச்சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை என்னும்படியாக அனைத்துவித பழைய,புதிய பொருட்கள் இங்கு கிடைக்கும். மளிகை,காய்கறி,வீட்டு உபயோகப் பொருட்கள்,மரப் பொருள்கள்,பூச்செடிகள்,தோட்ட பயன்பாட்டுப் பொருட்கள்,துணிமணிகள், மின் சாதனங்கள், கணினி,செல்லப்பிராணிகள் என்று சாமான்ய மக்களின் மல்டிபிள் மால் ஆக விளங்குகிறது இந்த வெள்ளிக் கிழமைச் சந்தை.
181 ஆண்டுகளாக நடைபெறும் இதன் இருப்பிடம் பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டுக்குச் சொந்தமானது.
1 1/2 கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சந்தை காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயங்குகிறது.