கேரளாவில் நிபா வைரஸ் எப்படி பரவியது? நிபுணர்கள் கூறும் காரணம்!
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்கள். கொரோனாவை தொடர்ந்து நம்மை அச்சுறுத்தும் நோயாக நிபா வைரஸ் தற்போது காணப்படுகின்றது.
கொரோனா அளவிற்கு நிபா வைரஸ் பரவ கூடியது அல்ல என்றாலும், 10 சதவீதற்கும் குறைவாக ஒரு நோயாளியிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
நிபா வைரஸ் குறைந்தது 10 பிற மாநிலங்களில் உள்ள வௌவால்களில் உள்ளன. ஆனால் கேரளாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இது ஏன் கேராளவில் மட்டும் பரவி வருகின்றது என சுகாதார நிபுணர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ்
நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும். இதன் பிறப்பிடம் ’fruit bats’ எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. இந்த நோயானது வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு பரவியது.
2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிப்பா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது. இருப்பினும், முதல் நபருக்கு நிபா எப்படி வந்தது என்பது இன்னும் தெரியவில்லை.
கேரளாவில் பரவியது குறித்து றிபுணர்கள் கூறும் காரணம்
கேரளாவில் 2018 இல் நிபா வைரஸ் முதன்முதலில் பரவியது. முதல் நோயாளிக்கு எப்படி நோய் பரவியது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதுதான் நாம் இப்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என மருத்துவ சங்க பொது சுகாதார நிலைக்குழு தலைவர் டாக்டர் ஏ அல்தாப் தெரிவித்துள்ளார்.
முதல் தொற்று இயற்கையில் இருந்து பரவியது, ஆனால் அது வௌவால் அல்லது வேறு ஏதேனும் விலங்கினமா அல்லது பழங்களிலிருந்து பரவியதா என்பது தெரியவில்லை.
மேலும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள வௌவால்கள் மத்தியில் நிபா வைரஸ் புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் பாண்டிச்சேரியில் நிபா வைரஸ் ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் கேரளாவில் மட்டும் நிபா அதிகமாக பாதிக்கப்படுகின்றது. இது கேரளா வௌவால்களின் எண்ணிக்கையில் பரவியிருக்கலாம். இனிப்பு மரச் சாற்றைக் குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களுக்கும் இது பரவியிருக்கலாம் எனவும் ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.