சத்தான வெல்லப் பாசிப் பருப்பு பாயசம்.

வெல்லப் பாசிப் பருப்பு பாயசம்  –

தேவையான பொருட்கள் –

பாசிப்பருப்பு – 2 கப்

வெல்லம் – 2 கப் அல்லது விருப்பம் போல்

தேங்காய்ப் பூ – 2 அல்லது 4 விருப்பம் போல்

நெய் -2 ஸ்பூன்

ஏலக்காய் – சிறிது

முந்திரி, கிஸ்மிஸ் – சிறிது.

செய்முறை –

முதலில் பாசிப்பருப்பினை நன்கு வாசனை வரும் வறுத்துக் கொள்ள வேண்டும்.

1 ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய்ப் பூவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பாசிப் பருப்பை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

தூளாக்கி வைத்துள்ள வெல்லம்,தேங்காய்ப் பூவினை வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, நன்கு கலந்து விட வேண்டும்.

மீதமிருக்கும் நெய்யைச் சூடு செய்து அதில் முந்திரிப் பருப்பையும் கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து வறுத்து பாயசத்தில் சேர்த்தால் சுவையான கைப்பக்குவமான பாயசம் தயார்.

இதனை வீடியோவாக காண ..

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.