தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அறிக்கையை மறைக்கிறார்கள்! கைகளில் ஈஸ்டர் தாக்குதல் இரத்தக் கறை தோய்ந்தவர்கள்! – சஜித்!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் தொகுதி அறிக்கையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை ஆராயுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிய போதிலும், அந்த கோரிக்கையை புறக்கணித்து தற்போதைய அரசாங்கமும், அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் வழங்கப்பட்ட கட்டளைகளை அப்படியே நடைமுறைப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த பகுதிகளை வாசிப்பதற்கு வாய்ப்பளிக்காது, தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு உண்மை யதார்த்தம் தெரியாத வேளையில், எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை கூட இதன் காரணமாக மீறப்பட்டுள்ள நிலையில், செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையில் ஆவணங்களை அணுகலாம் என்று கூறுவது நியாயமற்றது. .உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.
வியாழன் மற்றும் வெள்ளி விவாதத்திற்கு முன்னர் அந்த பகுதிகளை வாசிப்பதற்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் மறைத்தால், அதை மறைப்பவர்கள் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பானவர்கள், அவர்களது கைகளில் இரத்தக் கறை படிந்துள்ளன என முடிவு செய்ய வேண்டிவரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
கோட்டாபய அரசாங்கம் வழங்கிய கட்டளைகளை இந்த அரசாங்கம் அமுல்படுத்துவது தவறானது எனவும் , அந்த அறிக்கைகளை 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் காட்டாமல் இரகசியமாக வைக்கப்படக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.