காச்சலால் கையை இழந்த யாழ்.மாணவி மீண்டும் பாடசாலைக்கு ….

யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் தாதியர்களின் அலட்சியத்தால் கையை இழந்த மாணவி இன்று (19) தனது படிப்பதற்காக பாடசாலைக்கு சென்றுள்ளார்.
அவரை ஏனைய மாணவர்கள் மலர் கொடுத்து வரவேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது பாடசாலை அபிவிருத்திச் சங்க அதிபர், ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய இந்தச் சிறுமி இந்து ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்.
கடந்த மாதம் 25ஆம் திகதி குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, கானுலா மூலம் அவருக்கு மருந்து வழங்கப்பட்டது.
எனினும் நரம்பு ஒன்று சேதமடைந்து கையின் கீழ் பகுதியில் இரத்தம் செல்ல முடியாமல் கை செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, இரண்டாவது நாளாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சிறுமியின் கையின் மணிக்கட்டிலிருந்து கீழ் பகுதியை அகற்றினர்.