புலிப் பயங்கரவாதியான கஜேந்திரனை உடன் சிறையில் அடையுங்கள்! – விமல் கூக்குரல்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஒரு புலிப் பயங்கரவாதி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
கஜேந்திரன் எம்.பியை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான திலீபனை நினைவேந்தும் ஊர்தியைத் திருகோணமலையில் சிங்கள மக்கள் தாக்கிச் சேதப்படுத்தியமை நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த ஊர்தியில் கஜேந்திரன் எம்.பியும் பயணித்தபடியால்தான் அவரும் தாக்குதலுக்கு இலக்கானார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கஜேந்திரன் எம்.பியும் ஒரு புலிப் பயங்கரவாதி எனச் சிங்கள மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் வடக்குத் தமிழ் மக்கள் நிராகரித்த கஜேந்திரன், தேசியப்பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றம் வந்தார் என்றும் விமல் வீரவன்ச எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.