விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம்
விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 வரிகள் கொண்ட அந்த கடிதத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, மிகவும் உருக்கமாக எழுதியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
love you all miss u all என தொடங்கி 10 வரிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், எனது நண்பர்களையும் ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன். நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும்” என நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.