பெங்களூரு டிராபிக் மத்தியில் காய்கறி நறுக்கிய பெண்…!
பெங்களூருவில் டிராபிக்கில் மாட்டிக்கொண்ட பெண் ஒருவர் தனது வீட்டில் சமையலுக்காக காருக்குள் இருந்தவாறே காய்கறிகளை நறுக்கியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவு வைரலாகியுள்ளது. ஐடி துறைக்கு பெயர் போன பெங்களூரு படுமோசமான டிராபிக் நகரங்களில் ஒன்றாக விமர்சிக்கப்படுகிறது. மிக அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும், பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நெதர்லாந்தை சேர்ந்த டாம் டாம் என்ற லொகேஷன் டெக்னாலஜி நிறுவனம் உலகிலேயே மிக மோசமான டிராபிக் ஏற்படும் நகரங்களில் பெங்களூருவுக்கு 2 ஆவது இடத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு டிராபிக்கில் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர் காரில் இருந்தவாறு சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.
டிராபிக் ஏற்பட்டாலும் உருப்படியாக நாம் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் பிரியா என்ற அந்த ட்விட்டர் யூசர் கூறியுள்ளார். அவரது பதிவு வைரலாகியுள்ளது. பெங்களூரு டிராபிக்கால் பாதிக்கப்பட்ட பலர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளார்கள். இன்னொரு நபர் ரேபிடோ வாகனத்தில் பின் சீட்டில் இருந்தவாறு லேப்டாப்பை எடுத்து பயன்படுத்த தொடங்கியுள்ளார். இந்த பதிவும் கவனம் பெற்றுள்ளது.
பெங்களூரு நகரத்தில் 10 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்றால் சராசரியாக 29 நிமிடம் 10 வினாடிகள் வரை ஆகும் என்று ஒரு தகவல் கூறுகிறது.