வடமராட்சி பகுதியில் ஒருவர் கொலை

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று (15) கூரிய ஆயூதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி வியாபாரிமூலை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.