சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல்
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாக கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து அவரை அண்மையில் கைது செய்தது.
இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி ஆந்திர மாநில சிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். குறைந்தது 5 நாட்களாவது விசாரிக்க போலீஸார் அனுமதி கோரியிருந்த நிலையில் 2 நாட்கள் விசாரணைக்கு மட்டும் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.