கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பின் போடப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹோமாகம – பிட்டிபன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நவம்பரில் ஆரம்பிக்கப்படவிருந்த உயர்தரப் பரீட்சை பின்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, பரீட்சைக்கான புதிய திகதி, அடுத்த வாரம் பரீட்சை ஆணையாளரினால் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.