கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபனின் நினைவாகச் சுடரேற்றி – மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.