பாராளுமன்ற உறுப்பினரை மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தித்தார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவு நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதேபோன்று இன்று(16-09-2020) கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1304/20 என்ற வழக்கின் பிரகாரம் 15/9/2020 தொடக்கம் 28.09.2020 வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வையும் அல்லது ஊர்வலங்கள் கூட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இடம் இன்று பகல் 11 30 மணியளவில் வழங்கியுள்ளார்.


இணைப்பு செய்தி:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடாது எனக் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இது தொடர்பான நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் கிளிநொச்சிப் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக இன்று அதற்கான தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.

இதன்படி இன்று முற்பகல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் நீதிமன்ற உத்தரவு தொடர்பான அறிவித்தலைக் கையளித்துள்ளனர்.

இந்த அறிவித்தலின் பிரகாரம் 15.09.2020 தொடக்கம் 26.09.2020 வரையான காலப்பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள், ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் எதனையும் நடத்தக்கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.