யாழில் நெல் விதைப்பு இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல் விதைப்பு விழா ஆரம்பமானது.
சமய சம்பிரதாயப்படி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இன்று காலை இடம்பெற்றது.
இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்துக்கான நெல் விதைப்பில் ஈடுபட்டதுடன் தமது வயல் நிலங்களைப் பன்படுத்தியதுடன், வரம்பு கட்டலிலும் ஈடுபட்டனர்.