இலங்கையில் மறைந்து வாழும் கெல்லியை பத்திரமாக அழைத்து வர பிரித்தானியா முயற்சி’.
13 மாதங்களாக இலங்கையில் சிக்கியுள்ள பிரித்தானிய பெண் கெல்லி பிரேசரை (35) (Kayyleigh Fraser) ஐக்கிய இராச்சியத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லின் நேற்று (29) பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவிருந்ததாக ‘டெய்லி மெயில்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கெல்லி பிரேசரை பத்திரமாக பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லின் கோரிக்கை விடுத்துள்ளதாக டெய்லி மெயில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
காலிமுகத்திடலில் நடந்த அரகலய போராட்டத்தின் போது இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜையான கெய்லி பிரேசர் மீது குற்றம்சாட்டப்பட்டு , அவரது வீசாவை இலங்கை குடிவரவுத் திணைக்களம் ரத்து செய்தது.
அரகலயபோராட்டத்திற்கு’ ஆதரவளித்த குற்றச்சாட்டின் காரணமாக, பிரச்சனைகளுக்கு உள்ளான அவர் தற்போது காணாமல் போயுள்ளார். அவர் குறித்த எந்த தகவலும் இல்லை.