பெண் புகலிட கோரிக்கையாளர்கள் நடை பயணம்.
அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கு நிரந்தரவிசா வேண்டி அதனை வலியுறுத்தி 22 பெண் புகலிட கோரிக்கையாளர்கள் நடை பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடைபயணம் மெல்பனில் இருந்து கண்பகா நோக்கி மேற்கொள்ளப்படவுள்ளது.
இது குறித்து குறித்த பெண்களில் இருந்து ஒருவர் தெரிவிக்கையில், நாம் பதினோரு வருடத்திற்கு மேலாக நிரந்தர விசா இன்றி இருக்கின்றோம்.
இந்தநிலையில், எமது துயரத்தையும், இன்னல்களையும் அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் 22 பெண்கள் ஒன்று சேர்ந்து இந்த நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.
இந்த பயணத்தை மேல்பின் உள்ள அமைச்சர் அலுவலகத்திற்கு முன்னால் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.
மேலும் இந்தப்பயணமானது ஒக்டோபர் 18 ஆம் திகதி கண்பகாவில் உள்ள நாடாளுமன்றத்தின் முன்னிலையில் நிறைவு பெரும் என கூறியுள்ளார்.
அதேவேளை, நாங்கள் நாளொன்றுக்கு 30 கிலோமீட்டர் நடக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த பெண்களின் முயற்சிக்கு வலு சேர்க்கும் முகமாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சத்தியராஜ் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 70 ஆண்டுகளுக்கு மேலாக இனப்படுகொலையின் காரணமாக ஏமாற்றி ஈழத்து சொந்தங்கள் அரவணைக்கும் கண்டங்களான ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவில் குடியேறினார்கள்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் 22 தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நிரந்தர விசா வேண்டும் என்று நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
மனித நேயமிக்க அவுஸ்திரேலிய அரசு அவர்களுடைய நயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு நிறைந்தர விசா வழங்க வேண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். என தெரிவித்துள்ளார்.