டெங்கு பரவல்.. தமிழகம் முழுவதும் இன்று முதல் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்க்காக மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல்
தமிழ்நாட்டில் தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, அதேபோல் பருவ நிலை மாற்றத்தால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் மறு உத்தரவு வரும் வரை இன்று முதல் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டார்.
மருத்துவ முகாம்
இந்நிலையில், மூவர் அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்திற்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்து முகாம் நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,
கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் எனவும், பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சைகள் வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.