ராஜினாமா செய்ய முன்வந்த அண்ணாமலை..டெல்லியில் நடக்கும் பரபரப்பு!!
தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அண்ணாமலை டெல்லியில் பாஜகவின் தேசிய தலைமையிடம் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அதிமுக தமிழக பாஜக தலைமையை சுட்டிக்காட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் நெருக்கடிகளை சந்தித்துவ வருகின்றார். தற்போதைய சூழலில் அதிமுகவிற்கு பாஜக கூட்டணி வேண்டும் என்பதை தாண்டி தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு அதிமுகவின் கூட்டணி முக்கியமே.
இதன் காரணமாகவே அவர் டெல்லி சென்று தேசிய கட்சி தலைமை உறுப்பினர்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் சந்திப்புகள் குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இல்லாத போதிலும், இது குறித்து சமூகவலைத்தளங்களில் பல தரப்பட்ட கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் இது குறித்து தன்னுடைய சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்து இருக்கின்றது. அண்ணமாலை தேசிய தலைமை நிர்வாகிகளை சந்தித்து பேசிய போது தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
ஆனால், கூட்டணி முறிவை பாஜக ஏற்காத நிலையில், மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்தைகைக்கு அக்கட்சி முயற்சி மேற்கொள்ள போவதாகவும், தொடர்ந்து அண்ணாமலையை மாநில தலைவராக நீடிக்க வைப்பதிலும் பாஜக மும்முரம் காட்டுவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.