புதிய இந்திய நாடாளுமன்ற கட்டிடம் – டாடாவின் கைவண்ணத்தில்
புதிய இந்திய பாராளுமன்றம் கட்டடம் கட்டும் பணிக்கு 7 நிறுவனங்கள் விண்ணப்பிருந்த நிலையில் ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் கைபற்றியது..
அரசு துறைகளுக்கான 8 கட்டடங்கள், அலுவலகர்கள் குடியிருப்புகள் என புதிய பாராளுமன்ற கட்டிடம், டில்லி சவுத் பிளாக், செண்ட்ரல் விஸ்டா பகுதில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டு இருந்தது.
முக்கோண வடிவில் தரை தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் பார்லிமென்ட் கட்டிடம் அமைய இருக்கின்றது. கட்டடத்தின் மேற்குப் பகுதியில் அசோகச் சின்னம் அமைய உள்ளது.
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் கட்டுமானப் பணிகள் துவங்கும் என தெரிகிறது.புதிய பாராளுமன்ற கட்டடத்தில் ஓரே நேரத்தில் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் வரை அமரும் வகையில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.
டாடா நிறுவத்திற்கு 861 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.