உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்.

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இன்று(05) ஆரம்பமாகின்றது.
தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் காண உள்ளன.
04 வருடங்களுக்கு ஒரு முறை கிரிக்கெட் சாம்பியன்களுக்கு மகுடம் சூட்டும் இந்த மாபெரும் திருவிழா 13 ஆவது தடவையாக இம்முறை நடைபெறவுள்ளது.
இந்த போட்டித் தொடர் இந்தியாவின் 10 மைதானங்களில் நடைபெறவுள்ளது.