மதுபான விருந்தில் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குருநாகல், அம்பன்பொல – திம்பிரியாவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வீடொன்றில் நடைபெற்ற மதுபான விருந்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திம்பிரியாவ பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிச் சாவடைந்துள்ளார்.
வீட்டு உரிமையாளரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.