வாலிப கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன்,மற்றும் நாவாந்துறை சென் மேரிஸ் அணி மோதல்..

இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் அணிக்கு 09 பேர் உள்ளடக்கிய “வாலிப கிண்ணம்” மாபெரும் உதைபந்தாட்ட போட்டியின் அரையிறுதியாட்டங்கள் கடந்த வாரம் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றது.

முதலாவது இளவாலை யங்கென்றிசியன் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணி மோதியது.
பெரும் ஆதரவாளர்களுடன் ஆரம்பமான போட்டியில் ஆரம்பத்தில் இருந்து மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் எதிரணி கோல்கம்பங்களை மாறி மாறி ஆக்கிரமிக்க இரு அணிகளும் கோல்போடும் வாய்புக்களை வீணடித்தன. சிறப்பாக விளையாடிய யூனியன் அணி யங்கென்றிஸ் அணியின் சிறப்பான பின்வரிசை தடுப்பாட்டம் , கோல்காப்பளரின் சிறப்பான காப்பாட்டம் காரணமாக கோல் வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன
பின்னர்
சொந்த மண்ணில் விளையாடிய யங்கென்றிஸ் அணியும் தமக்கு கிடைத்த வாய்புக்களை தவறவிட முதல் பாதியாட்டம் 00:00 என முடிவுற்றது.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பத்திலிருந்து ஆட்டம் சூடுபிடித்தது. யங்கென்றிஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் கோல் போடுவதற்கான வாய்புக்கள் தவறவிடப்பட்டது . பின்னர் மிகச் சிறப்பாக விளையாடிய இரு அணியும் கோல் போடுவதற்காக போராடிய போதும் இரு அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் போடுவதற்காக கடும் முயற்சி மேற்கோண்டும் பலன் அளிக்காமல் போக ஆட்டம்
00:00 என சமனிலையில் நிறைவு பெற்றது.

வெற்றியை தீர்மானிப்பதற்கான சமனிலை தவிர்ப்பு உதையில் 05:04 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மாபெரும் இறுதிப்போட்டிக்கு நுழைந்தது ஆனைக்கோட்டை யூனியன்.

இரண்டாவது அரையிறுதி ஆட்டமாக பெரும் எதிர்பார்பிகளுகைகு மத்தியில் இடம்பெற்ற இப்போட்டியில் குருநகர் பாடும் மீன் அணியை எதிர்த்து நாவாந்துறை சென் மேரிஸ் அணி மோதியது.
போட்டியின் ஆரம்பத்தில் இருந்து மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் எதிரணி கோல்கம்பங்களை மாறி மாறி ஆக்கிரமிக்க இரு அணிகளும் கோல்போடும் வாய்புக்களை வீணடித்தன. சிறப்பாக விளையாடிய பாடும்மீன் அணியின் முன்கள வீரர் ஹரீஸ் சிறப்பான கோலை அணிக்கு பெற்றுக்கொடுக்க கிடைக்க முதல் பாதியாட்டம் 01:00 என முடிவுற்றது.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பத்திலிருந்து ஆட்டம் சூடுபிடித்தது. சென்மேரிஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர் . தமக்கு கிடைத்த தண்ட உதை வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய சென் மேரிஸ் அதனை கோலாக மாற்ற ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
பதிலுக்கு பாடும்மீன் அணி ஆக்ரோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் கோல் போடுவதற்கான வாய்புக்கள் தவறவிடப்பட்டது . பின்னர் மிகச் சிறப்பாக விளையாடிய இரு அணியும் கோல் போடுவதற்காக போராடிய போதும் சென் மேரிஸ் அணியின் முன்கள வீரர் யேசுறாஜ் சிறப்பான உதை மூலம் அபார கோலை பெற்றுக்கொடுக்க ஆட்டம்
விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்றது.

பின்னர் சளைக்காமல் கடைசிவரை போராடிய பாடும்மீன் அணி ஆட்டம் நிறைவடைய
ஒரு சில நிமிடங்கள் இருக்கையில் தமக்கு கிடைத்த தண்ட உதையை சரியாக பயன்படுத்தி அதனை கோலாக மாற்ற மைதானம் அதிர்ந்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 02:02 என்ற நிலையில் போட்டி சமனிலையில் முடிவுற்றது.

வெற்றியை தீர்மானிப்பதற்கான சமனிலை தவிர்ப்பு உதையில் 04:03 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணியை வீழ்த்தி மாபெரும் இறுதிப்போட்டிக்கு நுழைந்தது நாவாந்துறை சென் மேரிஸ்.

Leave A Reply

Your email address will not be published.