முறிந்து விழும் அபாயத்திலுள்ள மரங்களை உடனடியாக அகற்றுக.
வீதியோரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரங்கள் தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அவர் பணித்துள்ளார்.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகளுக்கு அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளையும் இந்த நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.