இஸ்ரேல் மீது 7,000 ராக்கெட்டுகளை ஏவிய பாலஸ்தீன ஆதரவு குழு.
பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தொடர் ராக்கெட் தாக்குதலை இன்று காலை நடத்தியது. ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டோர்ம் (Operation Al-Aqsa Storm) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் முதல் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.
அதைத் தொடர்ந்து, மேலும் 2,000 ராக்கெட்டுகளை ஹமாஸ் ஏவியது. இதில், ஒரு இஸ்ரேலிய பெண் உயிரிழந்தார். ஹமாஸ் குழு மிகப்பெரிய தவறை இழைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் குழுவினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.