விசேட மூலிகைகள் வளர்ப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிப்பு.
ஆரோக்கியம் பேண, ஆயுளை அதிகரிக்க, சுத்தமாக இருக்க, சுகமாக வாழ, பசி தீர்க்க, தாகம் தணிக்க, வன்மை அதிகரிக்க, வயோதிபத்தை பிற்போட ,மூலிகைகளினால் நாடு தன்னிறைவு பெற உதவும் விசேட மூலிகைகள் வளர்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள சமூக மருத்துவப் பிரிவினரால் வழங்கப்பட்ட சில மூலிகைக் கன்றுகள் இன்று 17.09.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு எமது யாழ்ப்பாண பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலர் மற்றும் உதவிப் பிரதேச செயலர் , கிராம அலுவலர் ஆகியோரால் நாட்டப்பட்டன.