ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000-ஆக உயர்வு.
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000 என மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது
கத்தாரை தளமாகக் கொண்ட தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் அல் ஜசீராவிடம், ஹெராத் மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பலரை காணவில்லை என்றும் கூறியுள்ளார்.
பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடாரங்கள், மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள் அவசரத் தேவை என்று தெரிவித்துள்ள உள்ளூர் வணிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன், தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், நிலநடுக்கம் மற்றும் வலுவான அதிர்வுகளால் களில் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்றும்
சுமார் ஆறு கிராமங்கள் அழிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர், அவசர உதவி தேவை என்றும் தெரிவித்தார்.