ஹமாஸிடம் அகப்பட்டுக் கொண்ட ஜேர்மன் பெண் ஷானி லூக் கொலை (வீடியோ)
இஸ்ரேலில் நடக்கும் ஒரு இசை விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஷானி லுக்கை, இஸ்ரேலிய ராணுவ வீரர் என்று தவறாக நம்பி ஹமாஸ் போராளிகள் , பிடித்து கொடூரமாக கொன்றுள்ளனர்.
ஷானி லூக் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முந்தைய இரவை நாட்டின் தெற்கில் உள்ள கிபுட்ஸ் ரீம் அருகே ஒரு திருவிழாவில் கழித்தார். அதிகாலையில் ஹமாஸ் தாக்குதல்காரர்களின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தப்பிச் செல்வதை ஆன்லைன் காணொளிகள் காட்டுகின்றன. இஸ்ரேலிய ஊடகச் செய்திகளின்படி, அங்கே கொண்டாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பின்னர் அவர்கள் தப்பியோடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் படையெடுப்பிற்கு மத்தியில் அக்பட்டுக் கொண்ட ஜேர்மன் பெண்ணான 30 வயது ஷானி லூக் நிர்வாணப்படுத்தப்பட்டு, பொது இடத்தில் அணிவகுத்து இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை, அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், ஷானி லூக் என்ற 30 வயது ஜேர்மன் பெண்ணின் சோகமான கதியைக் காட்டும் காணொளி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேலில் நடக்கும் ஒரு இசை விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஷானி லுக்கை, இஸ்ரேலிய ராணுவ வீரர் என்று தவறாக நம்பி ஹமாஸ் போராளிகள் , பிடித்து கொடூரமாக கொன்றுள்ளனர்.
இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த கைது வீடியோ, ஹமாஸ் உறுப்பினர்களால் ஒரு இளம் பெண்ணின் உயிரற்ற, நிர்வாண உடலை தெருக்களில் இழுத்துச் செல்லும் கொடூரமான சம்பவத்தை சித்தரிக்கிறது. இந்த கொடூரமான ஊர்வலத்தின் போது பெண் கேலி மற்றும் ஏளனத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.