எயார் கனடா விமான சேவை இஸ்ரேலுக்கான பயணங்களை இடைநிறுத்தியுள்ளது.

எயார் கனடா விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறான ஒரு பின்னணியில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் தெல் அவிவிற்கான விமான போக்குவரத்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தெல் அவிவிற்கும் டொரன்டோவுக்கும் இடையில் நாள்தோறும் எயார் கனடா விமான சேவை விமான போக்குவரத்து செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொன்றியலிலிருந்து இருந்து தெல் அவிவிற்கு மூன்று தடவைகள் விமான பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. போர் பதற்ற சூழ்நிலை காரணமாக இந்த விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் சுமார் 2000 கனடியர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதனால் பல கனடியர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.