டெங்கு பரவலை தடுப்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்.

எதிர்வரும் மழை காலத்தில் டெங்கு அதிகரிக்கும் அபாய சூழ்நிலை காணப்படுவதால் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பரிவுகள் அனைத்திலும் அந்த அபாய நிலையினைக் குறைக்கும் வகையில் எவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்பது தொடர்பாக இன்று 17.09.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலர்,சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை வைத்தியர்,பொது சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள்,கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள்,மாதர் அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஏனைய கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.