ஆதனவரி அறவீட்டு வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை.
குறித்த கோரிக்கை கடிதத்தில் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி , அதிகரித்த வீதத்தில் காணப்படுவதாக பல்வேறுபட்ட தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் , அதற்குரிய தீர்வை எட்டும் நோக்கோடு என்னால் இரண்டு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டிருந்தன . கிளிநொச்சி நகர வர்த்தக அபிவிருத்திச் சங்கம் , கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கம் , கிளிநொச்சி மாவட்ட வணிகர் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களையும் , சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இணைத்து 2020.08.26 ஆம் திகதி எனது அலுவலகத்திலும் , 2020.09.05 ஆம் திகதி K.K மண்டபத்தில் தங்களின் பிரசன்னத்தோடும் நடைபெற்ற கருத்துப் பகிர்வுகளின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதனவரி அறவீட்டு வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது