வாகன விபத்தில் ஆண் ஒருவர் படுகாயம்!

வாகன விபத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பதுளை – பசறை பிரதான வீதியில் லிசாகோஸ் முன்பாக இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சிறிய லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.