பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை.

ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களும், பேக்கரிகளும் இன்று (17.09.2020) சுகாதார பரிசோதன அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, அம்பகமுவ சுகாதார பிரிவின் பொதுசுகாதார மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டலுக்கமைய பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகளால் மேற்படி திடீர் சுற்றிவளைப்பு  சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, உணவுகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா, பழுதடைந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது.

சில ஹோட்டல்களும், பேக்கரிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. அதன் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில கடைகளின் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.அடுத்துவரும் நாட்களில் ஏனைய வர்த்த நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.