அரசியல் வேண்டாம்! – அலி சப்ரி தீர்மானம்.

“அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. எனது அரசியல் பயணம் ஒரு தடவைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“அரசியல் எனக்கு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன். அழைப்புகள் வந்தாலும் அதனை ஏற்கும் நிலையில் இல்லை. எனது தொழில்சார் நடவடிக்கையை முன்னெடுக்கவே எதிர்பார்த்துள்ளேன்.
அரசியலுக்கு வந்து ஒரு சதம்கூட சம்பாதித்தது கிடையாது. அதற்கான தேவைப்பாடும் எனக்கு இல்லை. எனது குடும்பத்தாரும் நான் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை.
நெருக்கடியான நேரத்தில் நாட்டை விட்டுச் செல்ல முடியாது. அதனால்தான் நெருக்கடியான காலகட்டத்தில் நிதி அமைச்சுப் பதவியைக்கூட ஏற்றேன். கடந்த வருடம் மே 9 ஆம் திகதிக்குப் பிறகு அரசியல் முழுமையாக வெறுத்துவிட்டது.” என்றார்.