தீவிரமாகும் காவிரி நீர் விவகாரம்; அவசரமாக கூடும் ஆணையம் – வெடிக்கும் போராட்டம்!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
காவிரி விவகாரம்
கர்நாடக மீண்டும் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மறுத்து வருகிறது. காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது.
தொடர் கூட்டங்களில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 3000 கன அடி வீதம் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
கூடும் ஆணையம்
இந்த முறையும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்துக்கு 3,000 கன அடிநீர் திறக்க உத்தரவிடப்படும் என தெரிகிறது.
இதற்கிடையில், வினாடிக்கு 16,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்துவோம் என்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.