24 மணிநேரத்திற்குள் வெளியேறவும்: பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலின் புதிய உத்தரவு.
காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள 11 இலட்சம் பாலஸ்தீனியர்களை 24 மணிநேரத்திற்குள் தெற்கு காஸாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் திகதி காஸா பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது.
அத்துடன் பாராகிளைடர்கள் மூலம் வான்வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் எல்லையிலும் இராணுவ வீரர்களைக் குவித்துள்ளது.
இந்த சூழலில் இஸ்ரேல் இராணுவம் முற்றுகையிட்டுள்ள காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள 11 இலட்சம் பாலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்குள் தெற்கு காஸாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
எனினும், குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய இடமாற்றம் சாத்தியமற்றது எனவும், இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.