மக்கள் நலன்சார் அபிவிருத்தியை மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்.
மக்கள் நலன்சார் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் கபில நுவன் அத்துக்கோரல
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரல இன்று மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
அத்துடன் தமது கடமைகளை ஆரம்பித்தமைக்கான கடிதத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இதன்போது கையளித்தார்.
கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான விசேட கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்களாகிய அனைவருக்கும் பாரிய பொறுப்பு காணப்படுவதாகவும் அதற்குறிய அரசியல் தலைமையை சிறப்பாக மேற்கொள்ள ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருக்கு கிடைக்க ஆசீர்வதிப்பதாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
மாவட்ட மக்களுக்கு பல தேவைகள் காணப்படுகின்றது.பல தேவைகள் உடையவர்கள் காணப்படுகின்றார்கள்.இவர்களை இனங்கண்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான பொறிமுறை ஏற்படுத்ப்படல் வேண்டும்.அதற்கு உரிய திணைக்களங்கள
இது தொடர்பான திட்ட முன்மொழிவுகளை தயாரித்து செயற்படல் இன்றியமையாயத்து. ஏனைய மாவட்ட மக்களது வாழ்வாதாரத்துக்கு இணையாக வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல் வேண்டும்.இங்குள்ள மக்களுக்கு பேதமின்றி சேவையாற்றுவதே தமது நோக்கம் .இதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் மக்களது பிரச்சினைகள் மற்றும் தமது விமர்சனங்களை கூட மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமது அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கமுடியும்.
இங்குள்ள மாவட்ட வளங்கள் நாட்டுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பயன்படுவது போன்று இங்குள்ள மாவட்ட மக்களுக்கு பிரதிபலன் கிடைக்கக்கூடியதாக அமைதல் வேண்டும்.இதேபோன்று ஏனைய வளப்பாவனையிலும் இங்குள்ள மக்களுக்கு பயனளிக்கும் பொறிமுறை ஏற்படுத்தப்படல் வேண்டும். கடந்த காலங்களில் இம்முறையில் சில குறைபாடுகள் காணப்பட்டதனால் மக்கள்
பலர் இன்று வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.எனவே மாவட்ட மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும் அதற்குறிய வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் கபில நுவன் அத்துக்கோரல தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,அதிமேதகு ஜனாதிபதியவர்களை சிலர் ஓர் இனவாதியாக சித்தரிக்க முற்பட்டனர். இம்முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் தற்போது 100000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்தமை எடுத்துக்காட்டாக அனைவருக்கும் அமைகின்றது. அதேபோன்று 50000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும். திருகோணமலை மாவட்டத்தில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள். சகல இன மக்களினதும் தேவைகள் பல காணப்படுகின்றது. அனேகமானவரின் தேவைகள் வெளிக்கொணரப்படாமல் காணப்படுகின்றது.பல கிராமங்களில் ஒரு வேளை உணவை மட்டும் மிகவும் கஸ்டப்பட்டு உண்ணக்கூடியவர்கள் உள்ளனர். இவர்களைப்போன்றவர்களுக்கு உரிய வாழ்வாதார திட்டங்களை ஏற்படுத்தல் வேண்டும் என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.
மேலும் காணி, விவசாயம், மணல் அகழ்வு உட்பட பல விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள் , அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.