யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் வெறியாட்டம்! – நபர் மீது கொடூர தாக்குதல்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாகத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து நபரைக் கீழே தள்ளி விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.