பணக்காரர்கள் பட்டியல்; புதிதாக நுழைந்த கோவை தமிழர்
பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, அதானியுடன் சேர்த்து ஒரு புதிய பெயரும் இடம் பெற்றுள்ளது.
பணக்காரர்கள் பட்டியல்
நாடு முழுவதும் வருடந்தோறும் உள்ள 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கௌதம் அதானி இரண்டாம் இடத்திலும், சிவ் நாடார் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது பெயரும் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளது. ராமசாமியின் கே பி ஆர் மில், சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி, பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல்களை உற்பத்தி செய்து வருகிறது.
கே.பி. ராமசாமி
கேபிஆர் மில் ஆண்டுதோறும் 128 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்கிறது. விளையாட்டு உடைகள் முதல் நைட் சூட் வரை சர்வதேச பிராண்டுகளான மார்க் அண்ட் ஸ்பென்சர், வால்மார்ட், ஹெச்எம் போன்ற நிறுவனங்களுக்கு தங்களது ஆடைகளை சில்லரை விற்பனை செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல காற்றாலைகளை நிறுவியதாகவும், கர்நாடகாவில் பசுமை மின்சாரத்தை வழங்குவதற்காக கோ ஜென் கம் சர்க்கரை ஆலையை நிறுவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இவரின் நிறுவனத்தில் பணிபுரியும் 90% பேர் பெண்கள். 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் 2.3 பில்லியன் டாலர், அதாவது 9.143 கோடி சொத்து மதிப்புகளுடன் கே.பி. ராமசாமி நூறாவது இடத்தை பிடித்துள்ளார்.