புலமை பரிசில் பரீட்சை முடிந்துவிட்டது… இனி குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கட்டும்… நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன்.
புலமைப் பரிசில் பரீட்சை முடிந்த பின் , பிள்ளைகளுக்குப் பரீட்சைக்குப் பின்னரான மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருப்பதற்கு வாய்ப்பளிக்குமாறும் பெற்றோர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் மேலும் கூறியதாவது:
புலமைப் பரிசில் பரீட்சை முடிந்ததும் பரீட்சைக்குப் பிந்தைய மன அழுத்தத்தை குழந்தைகளிடம் உருவாக்காதீர்கள். சில பெற்றோர்கள் , தேர்வு முடிந்தவுடன் வினாத்தாள்களில் மீண்டும் எழுதி பார்க்க வைக்கிறார்கள். மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. சரியாக எழுதப்படாததால் குழந்தைகள் அச்சுறுத்தப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள்.
இந்த மாதிரியான காரியத்தை நிறுத்துங்கள். தேர்வு முடிந்ததும் குழந்தைகளை மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பளியுங்கள். கடந்த காலத்தில் போல அவர்களது விளையாட்டுகளில் ஈடுபட விடுங்கள். குழந்தைகளுக்கு தொலைக்காட்சியை பார்க்கும் வாய்ப்பை கொடுங்கள். பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தைகளை வீழ்த்தி விடாதீர்கள்.