பகிடிவதை தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை
யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி விடையத்தினை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்விபயிலும் சிங்கள மாணவர்களால் சமூக வலைத்தளத்தினை பயண்படுத்தி பாலியல் ரீதியான பகிடிவதை இடம்பெற்றதாக சிங்கள மொழிப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் நடவடிக்கையினை எடுத்து வருகின்றனர், என தெரிவித்தார்.