செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை: உயர்நீதிமன்றம்

அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு கடந்த 16- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ வாதிட்டாா். மேலும் அமைச்சா் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை, உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சாா்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல். சுந்தரேசன் வாதிட்டாா். அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45-ஆவது பிரிவு பொருந்தாது எனத் தெரிவித்தாா்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், மருத்துவக் காரணத்தை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.